ரவுடி போல செயற்படும் அமெரிக்கா – வடகொரியா அதிருப்தி

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவின் போக்கு ரவுகளை போல உள்ளது என வடகொரியா விமர்சித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பிற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு இருந்தது. “அணு ஆயுதங்களை வடகொரியா விட்டுக் கொடுப்பதாக சொல்வது வெறும் பேச்சு தான். அது நடக்க வாய்ப்பே இல்லை” என பல சர்வதேச நிபுணர்கள் எச்சரித்தனர்.

ஆனால், எந்தவித திட்டங்களும், இல்லாமல், கிம்மை ட்ரம்ப் சிங்கப்பூரில் சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து, அணு ஆயுத சோதனைகளை நிறுத்தவும், அணு ஆயுதங்கள் உற்பத்தியை நிறுத்தவும் வடகொரியா வாக்குறுதி அளித்ததாக ட்ரம்ப் தெரிவித்தார். ஆரம்பத்தில் அணு ஆயுதங்களை தடை செய்வது போல காட்டிக் கொண்டாலும், பின்னர் அணு ஆயுத உற்பத்தியில் வடகொரியா ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்தது. இந்த ஒப்பந்தத்தை முழுமையடையவைக்க, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ மீண்டும் வடகொரியா சென்றிருந்தார். இரண்டு நாட்கள் அங்குள்ள உயர் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை மிக சிறப்பாக சென்றதாக பாம்பேயோ கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார். ஆனால், வடகொரிய தரப்பில், அமெரிக்காவின் பேச்சுவார்த்தை மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அமெரிக்காவின் பேச்சுவார்த்தை ரவுடிகளை போல உள்ளது என வடகொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில், வடகொரியாவை மிரட்டி காரியம் சாதிக்க அமெரிக்கா முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Sharing is caring!