ராகுலை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்… கடும் கோபத்தில் உள்ள மம்தா

புதுடில்லி:
திமுக தலைவர் ஸ்டாலின் மீது மம்தா கடும் கோபத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

பா.ஜ., எதிர்ப்பு கூட்டணி சார்பாக ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியது, கூட்டணிக் கட்சிகளிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜி, ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் உள்ளதாக, அவர் கட்சி சீனியர்கள் தெரிவிக்கின்றனர்.

‘இப்படி சொல்ல, ஸ்டாலினுக்கு என்ன அவசரம்?’ என கோபத்தில் கொந்தளித்தாராம், மம்தா.’ராகுல் பெயரைச் சொன்னால் ஓட்டு கிடைக்குமா’ என கேள்வி எழுப்பும் மம்தா, ‘மாநில கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, ஒரு பிரஷர் குரூப் உருவாக்க வேண்டும் என நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஸ்டாலின் இதை ஏன் கெடுக்கிறார்’ என்கிறாராம். எப்படியும் காங்கிரஸ் தனியாக ஆட்சி அமைக்க முடியாது; மாநில கட்சிகளின் உதவி அவசியம்; அப்படியிருக்க, எதற்கு காங்கிரஸ் பிரதமர்; கூட்டணிக் கட்சிகளிலிருந்து யாராவது ஒருவர் பிரதமர் ஆகலாமே’ என்பது மம்தாவின் எண்ணம். இவருக்கும் பிரதமர் ஆசை இருப்பதாக கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!