ராகுல் காந்தி தலைமையில் பேரணி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இன்று எதிர்க்கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரஸ் இது குறித்து அரசுக்கு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைக்க யோசனை தெரிவித்தது. மத்திய அரசு அதை கவனத்தில் கொல்ளவில்லை.

இன்று காங்கிரஸ் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்து நாடெங்கும் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்துக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளது. நாடெங்கும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்படுகிறது.

இன்று இந்த முழு அடைப்பு போரட்டத்தை ஒட்டி டில்லியில் பேரணி ஒன்று நடைபெறுகிறது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் கலந்துக் கொண்டுள்ளனர். காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானம் வரை இந்த பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

Sharing is caring!