ராஜஸ்தான், தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது… ஓய்ந்தது!!!

புதுடில்லி:
ஓய்ந்தது… ஓய்ந்தது… ராஜஸ்தான், தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது.

ராஜஸ்தான் (200 தொகுதிகள்) மற்றும் தெலுங்கானா (119 தொகுதிகள்) மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இம்மாநிலங்களில் நாளை 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலையொட்டி 2 மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஓட்டுப் பதிவு முடிந்த பின்னர் இந்த மாநிலங்களிலும் ஏற்கனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம் ஆகியவற்றுடன் சேர்த்து ஓட்டு எண்ணிக்கை வரும் 11-ந் தேதி நடக்கிறது. அன்று மதியம் 2 மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!