ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் அஞ்சலிக்காக..

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணாசாலையில் உள்ள ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் அவரது உடலுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட திரையுலகை சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கலைஞர் உடலுக்கு அருகே அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உள்ளனர்.

கலைஞருக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள், தி.மு.க தொண்டர்கள் திரண்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் இருந்து பொதுமக்கள், திமுக தொண்டர்கள் கருணாநிதியின் உடலை இறுதியாக காண சாரை சாரையாக சென்னை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

சென்னை அண்ணா சாலை முழுவதும் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Sharing is caring!