ராஜினாமா… கட்சியிலிருந்து விலகினார் மாஜி நிதியமைச்சர்

புதுடில்லி:
இனி கட்சியில் தொடர விரும்பவில்லை என்று ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார் மாஜி நிதியமைச்சர்.

ஜம்மு – காஷ்மீர் மாநில முன்னாள் நிதியமைச்சர், ஹசீப் திரபு, பி.டி.பி., எனப்படும் மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகினார். பி.டி.பி., – பா.ஜ., கூட்டணி அரசு அமைந்தபோது, அமைச்சர் பதவியில் இருந்து, அவர் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து, கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கியிருந்தார். ‘கட்சியின் சார்பில், எம்.எல்.ஏ.,வாக இருந்ததால், இதுவரை கட்சியில் இருந்து விலகாமல் இருந்தேன். தற்போது சட்டசபை கலைக்கப்பட்டுள்ளதால், இனி கட்சியில் தொடர விரும்பவில்லை’ என, ராஜினா கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!