ராஜ்யசபா துணைத் தலைவரானார் ஹரிவன்ஷ் நாராயண்

புதுடில்லி:
ராஜ்யசபா துணைத் தலைவரானார் பாஜ கூட்டணியை சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண்.

ராஜ்யசபா துணைத்தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

ராஜ்யசபா துணைத் தலைவராக இருந்த காங்கிரசை சேர்ந்த, பி.ஜே.குரியனின் பதவிக் காலம் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

போட்டியின்றி தேர்வு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிதிஷ் குமாரின், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த, ஹரிவன்ஷ் நாராயண் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதே போல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரசைச் சேர்ந்த, பி.கே.ஹரிபிரசாத், வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடந்தது. இதில் ஹரிவன்ஷ் நாராயண் சிங் 125 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார், ஹரி பிரசாத்திற்கு 105 ஓட்டுகள் கிடைத்தன. இதில், அ.தி.மு.க.,வின் 13 எம்.பி.,க்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!