ராமர் கோயில் எப்போது? உடனே அறிவிக்கணும்… சிவசேனா தலைவர் வலியுறுத்தல்

லக்னோ:
உடனே அறிவிக்க வேண்டும்… அறிவிக்க வேண்டும்… என்று சிவசேனா தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் எப்போது கட்டுவீர்கள் தேதியை பா.ஜ. உடனடியாக அறிவிக்க வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக விஷ்ய இந்து பரிஷத் உள்ளிட்ட அமை்பபுகள் சிவசேனா கட்சி ஆகியன ராமர் கோயிலை கட்ட வேண்டும் என மத்தியில் ஆளும் பா.ஜ.வை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இரண்டுநாள் பயணமாக அயோத்தி வந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பல்வேறு இந்து அமைப்புகள், சாதுக்கள் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:

ராமர் கோயில் விவகாரத்தை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை.
உ.பி.யிலும், மத்தியிலும் பா.ஜ. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்து வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என வாக்குறுதியும் அளித்தது. அதை நிறைவேற்றவில்லை.

அயோத்தியில் ராமர்கோயில் எப்போது கட்டப்படும் அதற்கான தேதியை பா.ஜ. அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!