ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி 24ம் தேதி தர்மசபா கூட்டம்

மும்பை:
ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி வரும் 24ம் தேதி தர்ம சபா கூட்டம் நடத்தப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத், சிவசேனா ஆகிய கட்சிகள் கடந்த நவம்பர் 25-ம் தேதி தர்ம சபாவை நடத்தின. இது தொடர்பாக டிச. 9-ம் தேதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்நிலையல் சிவசேனா கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி மஹாராஷ்டிரா மாநிலம் பந்தபூரில் வரும் 24-ம் தேதி தர்ம சபா கூட்டம் நடத்தப்படும். அப்போது ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக பார்லி.யில் சட்டம் இயற்ற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!