ராமேஸ்வரம் அருகே கடல் கொந்தளிப்பு

ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் சூறாவளி காற்று வீசுவதால், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து நவ.,23 இரவு கன மழை கொட்டி தீர்த்ததில் ராமேஸ்வரத்தில் 22.5 செ.மீ., மழை பதிவானது.

இதன் பிறகு மழையின்றி வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று முதல் மீண்டும் வடகிழக்கு பருவக் காற்று சூறாவளியாக வீசியது. இதனால் ராமேஸ்வரம் தீவு, மண்டபம் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் கடற்கரையில் ஆக்ரோஷமாக மோதி எழுந்தது.

இருப்பினும் வங்க கடல், பாக்ஜலசந்தி கடலில் புயல், கன மழை எச்சரிக்கை ஏதும் இல்லாததால் நேற்று ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து 1200 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!