ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படை வீரர்கள் மீண்டும் அராஜகத்தில் இறங்கி உள்ளனர்.
நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் விரட்டியடித்ததால் கரை திரும்பினர். ‘பெய்ட்டி’ புயல் எச்சரிக்கையால் டிச.,12 முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
புயல் கரை கடந்ததும் 7 நாட்களுக்கு பிறகு டிச.,19ல் ராமேஸ்வரத்தில் இருந்து 400 விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய-இலங்கை எல்லையில் மீன்பிடித்த போது, அங்கு 3 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.
இதனால் நுாற்றுக்கும் மேற்பட்ட படகில் மீன்வரத்து இன்றி படகிற்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்டத்துடன் கரை திரும்பினர்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S