ரூ.1000 கோடி தேர்தல் நிதி… வருமான வரி தாக்கலில் பாஜ தகவல்

புதுடில்லி:
தேர்தல் நிதியாக பாஜ ரூ.1000 கோடி வசூலித்துள்ளது. இதை வருமான தாக்கலில் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் தேர்தல் நிதியாக ரூ.1000 கோடியை பா.ஜ., வசூலித்துள்ளது. தேர்தல் கமிஷனிடம் பா.ஜ., அளித்த ஆண்டு கட்சி வருமான தாக்கலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் அதிகபட்சமாக தேர்தல் நிதியாக பா.ஜ., ரூ.1000 கோடி வசூலித்துள்ளது. இதே போல் மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் நிதி ரூ.618 கோடியில் இருந்து ரூ.717 கோடியாகவும், மம்தாவின் திரிணாமுல் காங்.,ன் தேர்தல் நிதி ரூ.262 கோடியில் இருந்து ரூ.291 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.104 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் ரூ.1.5 கோடியும் ஆண்டு வருமானமாக பெற்றுள்ளன. தேர்தல் கமிஷன் விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அனைத்தும் தங்களின் ஆண்டு வருமான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால் காங், தேசியவாத காங்., உள்ளிட்ட கட்சிகள் இதுவரை தங்களின் வருமான கணக்கை தாக்கல் செய்யவில்லை. ஆனால் பா.ஜ.,வின் ரூ.1000 கோடி வசூல் குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க காங்., திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் கோபால் அகர்வால் கூறுகையில், நாங்கள் எங்களின் கட்சி வருமானம் குறித்த விபரத்தை தேர்தல் கமிஷனிடம் ஏற்கனவே தாக்கல் செய்து விட்டோம். ஆன்லைன் மூலமும், காசோலையாகவும் நாங்கள் நிதி வசூலித்துள்ளோம். நமோ ஆப் மூலம் சிலர் நிதி அளித்துள்ளனர். ஆனால் மற்ற கட்சிகள் அனைத்து நிதியையும் கணக்கு காட்டால் ஒரு பகுதியை கருப்பு பணமாக பதுக்குகின்றனர் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!