ரூ.1,401 கோடி ஒதுக்கீடு… ஒதுக்கீடு… கோர்ட்டில் அரசு மனு தாக்கல்
சென்னை:
ரூ.1,401 கோடி ஒதுக்கீடு… ஒதுக்கீடு… புயல் நிவாரணப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.1,401 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கஜா புயல் பாதிப்புக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக்கோரும் வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்கிறது. புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு உதவி கலெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நிவாரண பணிகளுக்கு ரூ.1,401 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து வழக்கு விசாரணை டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி