ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்தால் நல்லதுதான்… கமல் கருத்து

சென்னை:
வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்தால் மகிழ்ச்சிதான் என்று கருத்து தெரிவித்துள்ளார் கமல்.

”ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும், 15 லட்சம் ரூபாய், ‘டெபாசிட்’ செய்யப்பட்டால் நல்லது தான்,” என, மக்கள் நீதி மைய தலைவர், கமல்ஹாசன் கூறினார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: ‘ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும், படிப்படியாக 15 லட்சம் ரூபாய், டெபாசிட் செய்யப்படும்’ என, மத்திய இணையமைச்சர், ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

பொறுத்திருந்து பார்ப்போம். வங்கி கணக்கிற்கு பணம் வந்தால் நல்லது தான். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!