ரூ.1997 கோடியாம்… மலைக்க வைக்குது… இது 4 ஆண்டு செலவாம்..!

இந்தூர்:
ரூ.1997 கோடியாம்… மலைக்க வைக்குது… மலைக்க வைக்குது… செலவுத் தொகையை கேட்டால். என்ன விஷயம் தெரியுங்களா?

எம்.பி.,க்களின் சம்பளம் மற்றும் சலுகைகளுக்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,997 கோடி செலவிடப்பட்டுள்ளது என்ற தகவல்கள்தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுடா, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்த கேள்விக்கு, லோக்சபா செயலகம் அனுப்பி உள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த நான்கு ஆண்டுகளில், எம்.பி.,க்களின் சம்பளம் மற்றும் சலுகைகளுக்காக, 1,997 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஒரு லோக்சபா, எம்.பி.,க்கு, ஆண்டுக்கு, 71.29 லட்சம், ராஜ்யசபா, எம்.பி.,க்கு, 44.33 லட்சம் ரூபாய் செலவாகிறது. லோக்சபாவில், இரண்டு நியமன, எம்.பி.,க்கள் உட்பட, 545 எம்.பி.,க்கள் உள்ளனர். ராஜ்யசபாவில், 245 பேர் உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!