“ரெட்கார்னர் நோட்டீஸ் இல்லாமலும் நாடு கடத்த கேட்கலாம்…”

புதுடில்லி:
ரெட் கார்னர் நோட்டீஸ் இல்லாமலும் கேட்க முடியும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

‘பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பியோடிய, பிரபல வைர வியாபாரி, மெஹுல் சோக்சியை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி, ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ இன்றி கோர முடியும்’ என, சி.பி.ஐ., கூறியுள்ளது.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் பிரபல வைர வியாபாரிகள், நிரவ் மோடி, மெஹுல் சோக்சி ஆகியோர், 13 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பினர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை சி.பி.ஐ., மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு, சி.பி.ஐ., எழுதிய கடிததத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு நாட்டில் குற்றம் செய்து விட்டு, மற்றொரு நாட்டுக்கு தப்பிய குற்றவாளியை கண்டுபிடிக்க, சர்வதேச போலீஸ் அமைப்பான, இன்டர்போலின், ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ வெளியிடப்படுகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த, மெஹுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோக்சியை நாடு கடத்தி, இந்தியாவுக்கு அழைத்து வர, இன்டர்போலின் ரெட் கார்னர் நோட்டீஸ் அவசியம் இல்லை. ஆன்டிகுவா குடியுரிமை பெற்றுள்ளதால், சோக்சிக்கு எதிராக, ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிப்பதால் பயன் கிடையாது. சோக்சியை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி, ஆன்டிகுவா நாட்டிற்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!