ரேஷன் கடைகளில் சிசிடிவி கேமரா… பதிலளிக்க கோர்ட் உத்தரவு

சென்னை:
ரேஷன் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து பதில் அளிக்க அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவதை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து பதில் அளிக்க அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து நீதிபதி கிருஷ்ண குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:

அட்டைகள் ஸ்மார்ட் கார்டாக மாறிய போதும் பொருட்கள் கள்ளத்தனமாக விற்படுவதை தடுக்க முடியவில்லை என கூறி உள்ளார். முன்னதாக ரேஷன் கடை ஊழியர் கீதா ரேஷன் பொருட்களை கள்ளத்தனமாக விற்பனை செய்யததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.

இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி மேற்கண்டவாறு கூறி உள்ளார் மேலும் இது குறித்து நாளை பதில் அளிக்கும் படி அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!