ரொக்கமில்லா பண பரிவர்த்தனை விழிப்புணர்வு கூட்டம்

விழுப்புரம்:
ரொக்கமில்லா பண பரிவர்த்தனை விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரொக்கமில்லா பணபரிவர்த்தனை சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், கவிதா, பிரான்சிஸ் முன்னிலை வகித்தனர். பஸ், லாரி, மேக்சிகேப் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன் கூறியதாவது:
விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று 1ம் தேதி முதல் வாகனம் தொடர்பான அனைத்து பணிகளும் வரி செலுத்துதல், பெயர் மாற்றம் செய்தல், தகுதி சான்று புதுப்பித்தல், தவணை கொள்முதல் மற்றும் தவணை ரத்து செய்தல் ஆகியவை இணையதளம் மூலம் மனு செய்கின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான கட்டணங்களும் கணினி மூலம் செலுத்தும் ரொக்கமில்லா பணம் பரிவர்த்தனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் நேரடியாக இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அதற்கான தொகையை ஆன்-லைன் மூலம் கட்டணம் செலுத்திய பின், ஒப்புகை சீட்டு பெற்று வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று, அதற்கான சேவைகளை எளிதில் பெற்று கொள்ளலாம்.

இருக்கும் இடத்தில் இருந்தே, மனு செய்தால் 24 மணி நேரமும் வங்கி வழியாக பணம் செலுத்துவதன் மூலம், மிகவும் சுலபமாக அவர்களின் ஓய்வு நேரத்திலே கட்டணம் செலுத்தி பயன்பெறலாம் என தெரிவித்தார்.

இதையடுத்து அனைத்து வகை வாகனங்களுக்கும் பணம் செலுத்துவது குறித்து விளக்கப்படம் காட்டப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!