லண்டனில் இருந்து இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட குப்பை..! மீண்டும் லண்டனுக்கே அனுப்பபடவுள்ளது..

லண்டனில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 98 கொள்கலன்கள் சோதனையிடப்பட்ட நிலையில் அவற்றில் குப்பைகளே காணப்படுவதாகவும்,

அவற்றை திருப்பி லண்டனுக்கே அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சுங்க பிரிவு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபை கொழும்பு துறைமுகத்திற்கு சென்று அந்த கொள்கலன்களை சோதனையிட்ட பின்னர் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அந்த கொள்கலன்களில் இருந்து பயன்படுத்தப்பட்ட பெருந்தொகை மெத்தை தொகை ஒன்று காணப்பட்டதாகவும், அது பாரிய அளவு சேதமடைநதுள்ளதாகவும்,

இது தொடர்பில் இலங்கை சுங்க பிரிவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திய மெத்தை வகைகள் இறக்குமதி செய்வதாக கூறப்பட்ட போதிலும்,

அதில் குப்பையாக மாறிய மெத்தையே காணப்பட்டுள்ளது. இதனை மெத்தை என கூறிய போதிலும், அதனை குப்பை என்றே கூற வேண்டும்

என சுற்று சூழல் அதிகார சபையின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Sharing is caring!