லண்டனில் மேடை நாடகக் கலைக்கு புத்துயிர்ப்பு

மேடை நாடகத்தை இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் லண்டனில் நாடக பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. லண்டனின் ராயல் ஓபரா ஹவுஸ் மேடை நாடகத்திற்கு புகழ்பெற்ற இடமாக பார்க்கப்படுகிறது.

ஒரு காலத்தில் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த லண்டனின் ராயல் ஓபரா ஹவுஸ் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. அழிந்து வரும் மேடை நாடக கலைக்கு புத்துயிர் தரும் விதமாக அடுத்த தலைமுறையிடம் அதை கொண்டு சேர்க்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மேடை நாடகம் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது இசை கலைஞரான நிக்கோலோ பர்கே என்பவர் இசைக்கேற்ப நடனமாடுவது, முகபாவனைகளை செய்வது போன்ற பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார்.

பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் நாடகக்கலை மனதிற்கு சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் அளிப்பதாக குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Sharing is caring!