லயன் எயார் விமான நிறுவன விமானம் கடலில் வீழ்ந்தது

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம், கடலில் வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லயன் எயார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக குறித்த விமானத்தில் 188 பேர் பயணித்துள்ளதாகக கூறப்படுகின்றது.

குறித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதுடன், வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்புப் பணியகத்தின் பேச்சாளர் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியதை உறுதிப்படுத்தியுள்ளார்.

போயிங் 737 MAX 8 என்ற புதிய விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Sharing is caring!