லாரி ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டது

புதுடில்லி:
முடிவுக்கு வந்தது… முடிவுக்கு வந்தது லாரி ஸ்டிரைக்… எட்டு நாட்கள் ஸ்டிரைக் பேச்சுவார்த்தையால் முடிவுக்கு வந்துள்ளது.

மத்திய அரசு உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து லாரி ஸ்டிரைக் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
பெட்ரோல் , டீசல் விலையை குறைக்க வேண்டும், 3-ம்நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், கடந்த 20ம் தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தி வந்தது.

இந்நிலையில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் குல்தரன்சிங் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் மத்திய தரை வழி போக்குவரத்து துறை செயலாளர் யுத்வீர் சிங் மலிக் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சமூக முடிவு ஏற்பட்டதை அடுத்து 8 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாக முதல் லாரிகள் ஓட துவங்கும். இவ்வாறு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!