லிபிய படகு விபத்தில் காணாமல்போனவர்கள் பலியாகியிருக்கலாம் என அச்சம்

லிபிய கரையில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று நீரில் மூழ்கியதில் காணாமல்போன நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

நேற்றைய இந்தச் சம்பவத்தில், 3 குழந்தைகளின் சலடங்கள் மற்றும் 16 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளதாக லிபிய கடலோரக் காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகின் எஞ்சினில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து, அது நீரில் மூழ்கியதாக பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த படகில் பயணித்த கிட்டத்தட்ட 120 பேரும், மொரோக்கோ மற்றும் யேமனைச் சேர்ந்த குடும்பங்கள் எனக் கூறப்படுகின்றது.

Sharing is caring!