லோக்சபா தேர்தலுடன் 4 மாநில சட்டசபை தேர்தலை நடத்த திட்டம்

புதுடில்லி:
லோக்சபா தேர்தலுடன் 4 மாநில சட்டசபை தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடடன் 4 மாநில சட்டசபை தேர்தல்கள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபாவிற்கு 2019-ம் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைகளின் பதவிகாலம் 2019 மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைகிறது.

இம்மாநிலங்களும் தேர்தல் நடத்தவேண்டிய நிலை உள்ளது. எனவே லோக்சபா தேர்தலுடன் 4 மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல்ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் அலுவலக அதிகாரி கூறியதாவது: லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைக்களுக்கும் தேர்தல் நடத்தப்படும். அப்போது காஷ்மீர் சட்டசபை தேர்தலும் சேர்ந்தே நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!