லோக்சபா தேர்தல் பற்றி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை:
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு தீர்ப்புக்கு பின், ஆட்சி நீடிக்குமா, கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில், மதுராந்தகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ’18 எம்.எல்.ஏ.,க்களின் தீர்ப்புக்கு பின், அ.தி.மு.க., ஆட்சி ஆட்டம் காணும்; இந்த கொள்ளை ஆட்சி, முடிவுக்கு கொண்டு வரப்படும்’ என்றார்.

இந்நிலையில் இன்று சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., மாவட்ட செயலர்கள், லோக்சபா தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்கிறது. இதில், பங்கேற்கிற மாவட்ட செயலர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும், எம்.எல்.ஏ.,க்களாகவும் உள்ளனர்.

எனவே இக்கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிப்பது, தேர்தல் நிதி திரட்டுவது மற்றும் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட உள்ளன. மேலும், 18 எம்.எல்.ஏ.,க்களின் வழக்கில், தினகரன் அணிக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ தீர்ப்பு வெளிவந்தால், தி.மு.க.,வின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!