லோபஸ் ஆப்ரதோர் மெக்சிகோ அதிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

தேசிய ரிஜெனரேஷன் சார்பில் போட்டியிட்ட லோபஸ் ஆப்ரதோர் மெக்சிகோ அதிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

மெக்சிகோ அதிபர், மற்றும் பிராந்திய பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.. இதில் அதிபர் பெனா நொய்டோவின் தலைமையிலான ஐஆர்பி மற்றும் இடது சாரி இயக்கமான தேசிய ரிஜெனரேஷன் ஆகியவை போட்டியிட்டன. போதை மாபியா ஆதிக்கங்களும் ஊழலும் அதிக அளவில் நிறைந்துள்ளதாகவும் இதற்கு ஆளும் பெனா நொய்டோவே காரணம் எனவும் மக்கள் தரப்பில் கூறப்பட்டது.

இதனால் பொதுமக்கள் பெனா நொய்டாவை தோற்கடிப்பார்கள் என பரவலாக பேசப்பட்டு வந்தது. அது இந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேசிய ரிஜெனரேஷன் சார்பில் போட்டியிட்ட லோபஸ் ஆப்ரதோர் மெக்சிகோ அதிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இடது சாரி ஆதரவாளர் ஆவார்.

இதன் மூலம் மக்கள் பெனா நொய்டாவின் ஆட்சியை தூக்கி எறிந்துள்ளனர். அத்துடன் தனது வெற்றியால் கடந்த ஒரு நூற்றாண்டாக மெக்சிகோவை ஆண்டு வந்த இரு கட்சிகளை லோபஸ் ஆப்ரதோர் வெளியேற்றி உள்ளார். இனி வன்முறை, ஊழலுக்கு முடிவு கட்டப்படும் என லோபஸ் ஆப்ரதோர் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!