வங்கி மோசடி நீரவ் மோடி, சோக்சிக்கு மீண்டும் சம்மன்

மும்பை:
வங்கியில் மோசடியாக பல ஆயிரம் கோடி கடன் பெற்று வெளிநாட்டிற்கு எஸ்கேப் ஆன நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்சி ஆகியோருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற, தொழில் அதிபர்கள், நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்சி ஆகியோரை, செப்., 25 மற்றும் 26ல் ஆஜராகும்படி, நீதிமன்றம், ‘சம்மன்’ அனுப்பியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த, வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றனர்.

சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கும்படி, மத்திய அரசுக்கு பரிந்துரைத்தனர். இந்நிலையில், பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், பார்லிமென்ட்டில் புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிய சட்ட விதிகளின் படி, இருவரும், மீண்டும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். செப்., 25 மற்றும் 26ல், இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என, அவர்களுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!