வசந்தம் வீசட்டும்… மகிழ்ச்சியும், நிம்மதியான வாழ்வும் பிறக்கட்டும்… மக்களுக்கு அருளாசி அளித்துள்ள ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள்

திருச்சி:
ஆங்கில புத்தாண்டு இன்று பிறக்கிறது. இந்த நாளில் அனைவரது வாழ்விலும் வசந்தம் வீசட்டும். நிம்மதியான வாழ்வும், நிலையான மகிழ்ச்சியும் ஏற்படட்டும்.

இந்த கலியுகத்தில் தினமும் 5 நிமிடங்களை ஒதுக்கி உங்களுக்கு இஷ்டமான தெய்வங்களை நினைத்து தியானம் செய்யுங்கள் அனைத்தும் நன்மையாக நடக்கும் என்று அனைவருக்கும் ஆசி வழங்கி உள்ளார் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் திருச்சி ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள்.

புத்தாண்டு பிறக்கும் இந்நாளில் மாற்றங்கள் மலரட்டும். அனைவரது வாழ்விலும் ஏற்றம் உண்டாகட்டும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் தினமும் உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தை 5 நிமிடங்கள் மனதார தியானம் செய்து பிரார்த்தியுங்கள். பரம் பொருள் சிவன், சக்தி, அன்னை அகிலாண்டேஸ்டவரி என்று உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானம் செய்யும் போது இன்பங்கள் பிறக்கும்.

ஒருவன் பல யுகங்களாக சிவனை நினைத்து பிரார்த்தித்து கடும் தவம் மேற்கொண்டான். அவனது தவத்தில் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் அவனுக்கு தரிசனம் கொடுத்தார். உனது கடும் தவத்தால் மகிழ்ச்சி அடைந்தோம். உனக்கு முக்தி அளிக்கவே தோன்றினோம். இத்தனை யுகங்களில் இல்லாத ஒரு சிறப்பு இந்த கலியுகத்தில் உண்டு. என்னை முழு மனதோடு நினைத்து ஒரு நிமிடம் தவமிருந்தால் முக்தி கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இதை கேட்டு மகிழ்ந்த அவன் இறைவா எனக்கு இன்னொரு பிறப்பு கொடுங்கள். அப்போது ஒரு நிமிடம் தவமிருந்து முக்தி அடைய வேண்டும் என்றான்.

அதுபோல் நீங்கள் செய்யும் சில நிமிட தியானம் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், பொருளாதார உயர்வையும் அளிக்கும். பல துன்பங்களில் இருந்து விடுதலை, மீட்பு, ரட்சிப்பு கிடைக்கும். மக்கள் அனைவருக்கும் அனைத்து வித செல்வங்களும் கிடைக்க அந்த அன்னை அகிலாண்டேஸ்வரியை வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆசியுரை அளித்துள்ளார் திருச்சி ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!