வடகிழக்கு பருவமழை ஸ்டார்ட்… டெல்டா மாவட்டங்களில் விடிய, விடிய மழை

திருச்சி:
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய பரவலாக மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை நவ.,1 ம் தேதி முதல் துவங்கும் எனவும் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகை மாவட்டத்தில் விடிய,விடிய பரவலாக மழை பெய்தது.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் 13 செ.மீ. , தலைஞாயிறில் 12 செ.மீ., , தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாநாசம், திருவிடை மருதூர் , திருச்சி மாவட்டம் சமயபுரம், டி.வி.எஸ்.டோல்கேட் உட்பட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!