வட கொரியாவின் அணுவாயுதக் களைவு தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை

வட கொரியாவின் அணுவாயுதக் களைவு தொடர்பில் பியோங்யாங்குடனான பேச்சு வார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தயார் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo) தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையேயான கலந்துரையாடல் முடங்கியது.

ஆனால், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னுக்கும் இடையிலான சந்திப்பு, வொஷிங்டனுக்கு மீண்டும் தைரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களது சந்திப்பைத் தொடர்ந்து, வட கொரியாவின் பிரதானமான ஏவுகணைத் தளத்தை மூடுவதற்கு கிம் இணங்கியுள்ளார்.

முக்கியமான இந்த செயற்பாடுகளின் அடிப்படையாக வைத்து, உடனடி பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா தயாராகியுள்ளதாக மைக் பொம்பியோ மேலும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அடுத்த வாரம் நியூயோர்க்கில் தன்னை (மைக் பொம்பியோவை) சந்திப்பதற்காக, வட கொரிய வௌிவிவகார அமைச்சர் ரி யோங் ஹோவுக்கு அழைப்பும் விடுத்துள்ளதாக தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!