வட கொரியா ஆயுதங்களைக் களையப் போவதில்லை

வட கொரியா மீதான அமெரிக்க தடைகள் தொடர்கின்ற நிலையில் தனது நாடு ஆயுதங்களைக் களையப் போவதில்லை என அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் ரி யோங் ஹோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான தடைகள் அமெரிக்கா மீதான வட கொரியர்களின் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்கின்றன என ஐ.நா. கூட்டத் தொடரில் பேசும்போது ரி யோங் ஹோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐ.நா. விதித்துள்ள தடைகளை நீக்குமாறு பியோங்யாங் மீண்டும் முறையிட்டுள்ளது.

ஆனால், வட கொரியா அணுவாயுதக் களைவை முன்னெடுக்கும் வரை குறித்த தடைகள் அமுலில் இருத்தல் வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Sharing is caring!