வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் மேற்பார்வையில், அதிநவீன ஆயுதப்பரிசோதனை

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் மேற்பார்வையில், அதிநவீன ஆயுதப்பரிசோதனை ஒன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆயுதம் நீண்டகாலமாக உருவாக்கப்பட்டு வந்ததாக மட்டும் கூறிய அரச செய்தி நிறுவனம், மேலதிக விடயங்கள் எதையும் வௌியிடவில்லை.

இது இந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட வட கொரியாவின் முதலாவது பரிசோதனை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் ஆகியயோருக்கு இடையிலான சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தில் அணுவாயுதப் பரவலை நிறுத்துவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வட கொரியா தமது அணுவாயுதக் களஞ்சியசாலைகளை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!