வட மற்றும் தென் கொரிய படையினர் எல்லையில் புதைக்கப்பட்டுள்ள 800,000க்கும் அதிகமான நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு ஆரம்பித்துள்ளனர்

வட மற்றும் தென் கொரிய படையினர், அவர்களது எல்லையில் புதைக்கப்பட்டுள்ள 800,000க்கும் அதிகமான நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்பகுதியில் பன்முன்ஜோம் கிராமத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட பகுதியில் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரிய போரின்போது நூற்றுக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்ட வேறான பகுதியிலுள்ள நிலக்கண்ணிவெடிகளும் அகற்றப்படவுள்ளன.

கடந்த மாதம் பியோங்யாங்கில் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் ஆகியோரது சந்திப்பின்போது, இதற்கு இரு தலைவர்களும் சம்மதித்திருந்தனர்.

Sharing is caring!