வரலை… வரலை… சசிகலா பரோலில் வரலை… தினகரன் தகவல்
சென்னை:
சசிகலா பரோலில் வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவரை அவ்வப்போது தினகரன் சென்று சந்தித்துவிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் சிறைக்கு சென்று சசிகலாவை பார்த்து வந்துள்ளார்.
இதையடுத்து சசிகலா பரோலில் வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து தினகரன் கூறுகையில, சசிகலா பரோலில் வரவுள்ளதாக கூறப்படும் தகவல்கள் உண்மை அல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் ஒரு அமைப்பு என நினைத்துக்கொண்டிருந்தோம். அது ஒரு மத்திய அரசு நிறுவனம். மழையை காரணம் கூறி இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் வானிலை மையம் கூறியதுபோல் மழை பெய்யவில்லை.
வானிலை மையமும், அரசியல் செய்கிறதோ என்று தோன்றுகிறது. அதேபோல், பாஜவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. அது தற்கொலைக்கு சமமானது என்றும் தெரிவித்துள்ளார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி