வராது… உண்மை வெளி வராது… சிபிஐ விசாரணை தேவை… சொல்வது ஸ்டாலின்

சென்னை:
வராது… உண்மை வெளி வராது… சிபிஐ விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி கமிஷனில் உண்மை வெளியாக வாய்ப்பில்லை. சி.பி.ஐ., விசாரணை தேவை என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் போலீசார் விசாரிக்கவேண்டும் என தமிழக சட்ட அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

ஜெயலலிதா மரணம் குறித்து ஏற்கனவே சி.பி.ஐ., விசாரணை கேட்டேன். அப்போது விமர்சிக்கப்பட்டேன். தற்போதைய ஆறுமுகசாமி கமிஷனில் உண்மை வெளியாக வாய்ப்பில்லை. எனவே உண்மை வெளிவரவேண்டுமெனில் சி.பி.ஐ., விசாரணை தேவை, என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!