வருமானவரித்துறை அதிரடி… கிறிஸ்டி நிறுவனத்தில் இருந்து ரூ. 4 கோடி சிக்கியது!

சென்னை:
அதிரடி… அதிரடி… வருமானவரித்துறை அதிகாரிகளின் அதிரடியால் ரூ. 4 கோடி சிக்கியுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

தமிழக அரசு பள்ளிகளுக்கு முட்டை வினியோகம் செய்யும் கிறிஸ்டி நிறுவனத்தில்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில்தான் ரூ.4 கோடி சிக்கியுள்ளது.

தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு உணவு பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடங்கினர்.

கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் வீடு, உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 45க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர். 2வது நாளாக நேற்றும் சோதனை தொடங்கியது. அதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கணக்கில் வராத பணமாக ரூ.4 கோடியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதேபோல் வெளிநாட்டில் பணம் முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!