வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய காலம் நீட்டிப்பு

சென்னை:
நீட்டிப்பு… நீட்டிப்பு… வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமானவரி சட்டத்தின்படி வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வரும் ஜூலை 31ம் தேதி கடைசி நாளாகும். ஆனால், இதை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது.

இதற்கு முன்னர் வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் அபராதம் செலுத்த வேண்டி வரும் என எச்சரித்தது. அதாவது 2018 டிசம்பர் 31ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5,000 வரை அபராதம்.

2018 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகு என்றால் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தனிநபர் ஒருவரின் வருவாய் ரூ.5 லட்சம் குறைவு என்றால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

ஆனால் இப்போது இந்த அபராதங்கள் இன்றி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஒரு மாத கால அவகாசத்தை நீடித்து உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!