வரும் ஜன. 15, 16, 17ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

சென்னை:
வரும் ஜன. 15, 16, 17ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் வருடம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு பீட்டா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியது. ஆனால் 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அந்த தடையை நீக்க வேண்டும் என சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்கள், தேதி குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவனியாபுரத்தில் ஜன.15ம் தேதி, பாலமேட்டில் 16, அலங்காநல்லூரில் 17ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ஜல்லிக்கட்டு ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!