வரும் ஜன.27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர்றார்… தமிழிசை தகவல்

சென்னை:
வரும் ஜன.27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார் என்று பாஜ தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது:

ஜன.,6க்கு பிறகு திருவாரூரில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். மாயாவதியின் மிரட்டல், காங்., தலைமையிலான கூட்டணி உறுதியில்லாத கூட்டணி என்பதை உறுதி செய்கிறது.

ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. அவரது மரணத்தில் உள்ள சந்தேகத்தை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஜன.,27 க்கு முன்னர் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!