வரும் 14ம் தேதி திமுக அவசர செயற்குழு கூட்டம்… தலைவராகிறாரா ஸ்டாலின்

சென்னை:
வரும் 14ம் தேதி அவசர செயற்குழு கூட்டம் நடக்கிறது… திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடக்கிறது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை கலைஞர் அரங்கில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடக்கும். இதில் செயற்குழு உறுப்பிர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க இந்த கூட்டம் நடக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதில் பொதுக்குழு கூட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என தெரிகிறது.

பொதுக்குழுவில் கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவது பற்றி பேசப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஸ்டாலின், திமுக பொதுச் செயலர் அன்பழகனை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, ராஜா, துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!