வரும் 2ம் தேதி ஆளுனர் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடக்கம்

சென்னை:
வரும் 2ம் தேதி தமிழக ஆளுனர் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்குகிறது.

இதுகுறித்து தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசியலமைப்பு, பிரிவு 174 (1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தை 2019 ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி, காலை 10 மணிக்கு  கூட்டியிருக்கிறார். ஆளுநர் அன்றைய தினம் உரை நிகழ்த்துவார்.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. அதன்பிறகு அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். எத்தனை நாள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று அன்றுதான் முடிவு செய்யப்படும். ஆளுநர் உரை மீதான விவாதம் எப்போது நடைபெறும்.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் குறித்தும் அன்றைய தினம் முடிவு செய்யப்படும். கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு புதிய திட்டங்களும், நிலுவையில் உள்ள திட்டங்களின் நிலைமை குறித்தும் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!