வரும் 20ம் தேதி முதல் பருவமழை தொடங்க வாய்ப்பு

புதுடில்லி :
வரும் 20ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்ற வானிலை மைய அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:

அக்.,20 ல் நாடு முழுவதும் தெற்குமேற்கு பருவமழை முடிவடையும் சூழல் நிலவுகிறது. அதே சமயம் அன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடர்வதற்கு ஏற்ற சாதகமான சூழல் நிலவுகிறது. தெற்கு தீபகற்பத்தில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு தற்போதுள்ள மழைப்பொழிவு தொடரும்.

கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் கனமழை முதல் மிக கனமழையும், ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதிகள், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழையும் பெய்துள்ளது.

தமிழகம்,புதுச்சேரியின் அநேக இடங்களில் இடியுடன் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக தொண்டியில் 5 செ.மீ.,ம், வால்பாறையில் 3 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!