வரும் 24ம் தேதி முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

சென்னை:
வரும் 24ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்க உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 24ம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் 2019-ம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரை குறித்தும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை, காவிரி குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் கட்ட திட்டமிட்டுள்ள அணை குறித்தும், கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசிடம் நிதி உதவி பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!