வர்த்தகப் போரை தொடங்க ஆரம்பித்துள்ளார் அமெரிக்க அதிபர்

வாஷிங்டன்:
வர்த்தகப் போரை கையில் எடுத்து அதிரடிக்க ஆரம்பித்துள்ளார் அமெரிக்க அதிபர். இதனால் நட்புறவு நாடுகள் கவலையடைந்துள்ளன.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிதிக்க முடிவெடுத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதித்திருப்பது குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய டிரம்ப், இதுபோன்ற நடவடிக்கைகளை இந்தியா கைவிட வேண்டும். ஐரோப்பிய யூனியன், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் மிக முக்கியமான வர்த்தக கூட்டாளிகள்.

இவர்களுடனான வர்த்தக உறவில் தற்போது சீரற்ற சூழல் நிலவுகிறது. அதனைச் சரிசெய்வதற்கான பதிலடி நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்தியா உட்பட, பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 100 சதவீத வரிவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க பொருள்களுக்கான இறக்குமதி வரியை மற்ற நாடுகள் ரத்து செய்தால், நாங்களும் அதேபோலச் செய்யத் தயாராக உள்ளோம் என்றார். மேலும் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஈரானிடம் இருந்து அனைத்து எண்ணெய் இறக்குமதியையும் நவம்பர் மாதத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவும் சீனாவும் தான் ஈரானிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. இந்த அறிவுறுத்தலை இந்தியா, சீன கம்பெனிகளும் கடைபிடிக்க வேண்டும். எவ்வித கேள்வியும் இன்றி இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் எனவும் அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை நட்புறவு நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!