வர்த்தகப் போரை 90 நாட்கள் வரை நிறுத்திவைக்க இணக்கம்

அமெரிக்காவுக்கு உறுதியளிக்கப்பட்ட வர்த்தக இணக்கப்பாடுகளை விரைவில் அமுல்படுத்த முடியும் என நம்புவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த விடயம் தொடர்பிலான விபரங்களை குறிப்பிடவில்லை.

இதற்கிடையே, ஆர்ஜன்டீனாவில் இடம்பெற்ற ஜி – 20 மாநாட்டின்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங் ஆகியோர் தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கைக்கு இணங்கியிருந்தனர்.

அதேநேரம், இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் வர்த்தகப் போரை 90 நாட்கள் வரை நிறுத்திவைக்க அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!