வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்கா – சீனா முடிவு

பியூனஸ் அயர்ஸ்:
தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன அமெரிக்கா மற்றும் சீனா நாடுகள்.

அமெரிக்கா மற்றும் சீனா நாடுகள், புதிய வரி விதிப்புகளை 90 நாட்கள் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது.

இதற்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனாவும் அதிகரித்தது. இந்நிலையில் அர்ஜென்டினாவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஷி ஜிங் பிங்கும் சந்தித்து பேசினர்.

சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் புதிய வரி விதிப்புகளை அடுத்த 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்பு கொண்டுள்ளன. இறக்குமதி பொருட்களுக்கு ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு வரிகள் விதிக்க போவதில்லை என ஒப்பு கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை மேலும் தொடரும் என இரு நாடுகளும் அறிவித்துள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!