வளைகுடா நாடுகளில் இன்று முதல் வரும் 26ம் தேதி வரை வானிலையில் மாற்றங்கள்

குவைத்:
கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகளில் இன்று முதல் வரும் 26ம் தேதி வரை வானிலையில் மாற்றங்கள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் இந்த வார இறுதிக்குள் கடல் நீர் உள்வாங்க கூடும் என்றும், பலத்த காற்று வீசக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

குவைத் வானிலை ஆய்வாளர் அப்துல்ஜிஸ் அல் குராவி கூறியதாவது: கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகளில் இன்று 26ம் தேதி வரை வானிலையில் மாற்றங்கள் ஏற்படும்.

கடல் மட்டத்தில் இருந்து ஏழு அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் ஏழவும், 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசும்,நவ.23ல் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பெய்த பலத்த மழையில், சாலைகள், கட்டடங்கள் பெரும் சேதம் ஏற்பட்டது. விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனிடையே, குவைத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஜபீர் அல் முபாரக் அல் ஹமாத் அல் சபா தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!