வழிபாட்டுத் தளம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பிட்ஸ்பேர்க் (Pittsburgh) நகரிலுள்ள வழிபாட்டுத் தளம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழிபாட்டு நேரத்தின்போது, தேவாலயத்தின் உள்ளே நுழைந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர் 46 வயதான ரொபேட் பௌவெர்ஸ் என அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவருக்குத் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

அத்தோடு, சம்பவத்தில் காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!