வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூவர் பலி

சீனாவில் 33 ஆசிரியர்களோடு பயணம் செய்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் தூக்கி வீசட்ட மூவர் பலியானார்கள். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவில் ஷோகூவான் எண் 8 மத்திய பள்ளியின் 33 ஆசிரியர்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றனர். அவர்கள் சென்ற பேருந்து எக்ஸ்பிரஸ் வழி அருகே சென்று கொண்டு இருந்த போது திடீரென நிலைதடுமாறி அந்தரத்தில் பறந்து குப்புற கவிழ்ந்தது. அதில் இருந்த பயணிகள் தூக்கியெறியப்பட்டனர். இவர்களில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பேருந்து அதி வேகத்தில் வந்து கொண்டிருக்கும்போது கீழே கொட்டியிருந்த எண்ணெய் போன்ற பொருளால் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.மலைப்பாதை வழியாக செல்ல சுரங்கப்பாதை அருகே செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நல்ல வேளையாக இந்த பேருந்தின் பின்னால் வந்து கொண்டிருந்த சிவப்பு நிற ட்ரக் பிரேக் போட்டு நின்றதால் உயிர்சேதம் அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது.

பேருந்தில் இருந்தவர்களில் சீட் பெல்ட் அணியாதவர்கள் தூக்கியெறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேருந்து விரைந்து வருவதும், நிலைதடுமாறி அந்தரத்தில் பறப்பதும், பயணிகள் தூக்கி வீசப்படுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. தற்போது இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Sharing is caring!