வாகனத்தில் இருந்து போலீஸ்காரர் கீழே விழ காரணமாக இருந்த இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்

சென்னை:
வாகனத்தில் சென்ற போலீசாரை பிடிக்க முயன்று அவர் காயம்பட காரணமாக இருந்த இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை தேனாம்பேட்டையில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேசனில் முதல்நிலை போலீசாக இருப்பவர் தர்மராஜ். தனது தாய்க்கு திதி கொடுக்க கடந்த 19ம் தேதி விடுப்பு கேட்டு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் மனு கொடுத்தார்.

ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. பின்னர் 21ம் தேதி பணிக்கு வந்த தர்மராஜ், தனது வாக்கி டாக்கி மூலம் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விடுப்பு நிராகரிக்கப்படுவது குறித்து புகார் கூறியுள்ளார்.

இதற்கிடையில் தர்மராஜ் பணியின் போது போதையில் இருப்பதாக புகார் எழுந்தது. சோதனையில் இது உறுதி செய்யப்பட்டதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் தேனாம்பேட்டை சி.வி.ராமன் சாலையில் தர்மராஜ் டூவீலரில் சென்றதை பார்த்த ரவிச்சந்திரன், அவரை பிடிக்க முயற்சி செய்தார்.

இதில், தர்மராஜ் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகின. இதையடுத்து ரவிச்சந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!